மாநில அளவிலான கபடி போட்டி - வெற்றி பெற்ற தருமபுரி மகளிர் அணியினருக்கு உற்சாக வரவேற்பு

Home

shadow

         மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற தருமபுரி மகளிர் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பாராட்டு விழா நடைபெற்றது.


திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காட்டில் மாநில அளவிலான சப்-ஜூனியர் மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. 


இதில், 32 மாவட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணியும் தருமபுரி அணியும் மோதின. இப்போட்டியில் தருமபுரி அணி 33 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மாநில அளவில் இடத்தைப் பிடித்து தருமபுரி திரும்பிய மகளிர் அணியை தருமபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பாராட்டினார்


இந்நிகழ்ச்சியில் மாவட்ட கபடி கழக தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இது தொடர்பான செய்திகள் :