மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

Home

shadow

 

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில், ஆண்கள் பிரிவில் ரத்தினவேல் என்பவரும், பெண்கள் பிரிவில் ஜோத்ஸ்னா என்பவரும் வெற்றி பெற்றனர்.

திண்டுக்கல்லில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவையைச் சேர்ந்த சர்வதேச வீரர் ரத்தினவேல் 2 ஆயிரத்து 292 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், திருவள்ளுரைச் சேர்ந்த பாரத் கல்யாண் இரண்டாவது இடத்தை, சென்னையைச் சேர்ந்த மனு டேவிட் 3வது இடத்தையும் கைப்பற்றினர். 

பெண்கள் பிரிவில், சர்வதேச சதுரங்க வீராங்கனையான ஜோத்ஸ்னா ஆயிரத்து 865 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். சென்னையைச் சேர்ந்த திவ்யபாரதி 2ஆம் இடத்தையும், திருவள்ளுரைச் சேர்ந்த ஹரிவர்தினி 3ஆம் இடத்தையும் கைப்பற்றியுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சதுரங்க சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இது தொடர்பான செய்திகள் :