மாநிலங்களவையில் பேச இயலாத சச்சின்

Home

shadow

பிரபல விளையாட்டு வீரர் என்ற வகையில் மாநிலங்களவை உறுப்பினராக, இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். ஆநால், இதுவரை மாநிலங்களவையில் எந்தவொரு பிரச்னை குறித்தும் கருத்துக் கூறாம`லும் எதுபற்றியும் பேசாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், விளையாட்டு உரிமை மற்றும் இந்தியாவில் விளையாட்டுத் துறையின் எதிர்காலம் என்ற தலைப்பிலான விவாதத்தில், மாநிலங்களவையில் அவர் இன்று முதன்முறையாகப் பேச முன்வந்தார். ஆனால், குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது, பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது பிரதமர் நரேந்திர மோடி எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக, 5-ஆவது நாளாக இன்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். 2ஜி வழக்கு தீர்ப்பும் மாநிலங்களவையில் எதிரொலித்தது. இந்த அமளி காரணமாக, சச்சின் டெண்டுல்கர் முதன்முறையாக இன்று பேசவிருந்தது தடைப்பட்டது. அமளி ஏற்படாமல் இருந்தால், விளையாட்டுத் துறை குறித்த விவாதத்தில் நாளை அவர் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :