முத்தரப்பு டி20 கிரிக்கெட்

Home

shadow

முத்தரப்பு டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோத உள்ளன.  

மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 3வது லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதனால் மூன்று அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் இனி வரும் போட்டிகளில் மூன்று அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இலங்கை பிரேமதாசா மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியிடம்  தோல்வி அடைந்த இந்திய அணி இன்று போட்டியில் வெற்றி பெற்று அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது தொடர்பான செய்திகள் :