மூன்று தங்க பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம்

Home

shadow

ஆசிய தடகள போட்டியின் இறுதி நாளில் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.


கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று, பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14 புள்ளி நான்கு 6 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதே போல் இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை  கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் வெண்கல பதக்கம் வென்றார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்திய அணி வெள்ளிப்பதகத்தை வென்றது. ஆண்கள் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 4 நாள் நடைபெற்ற போட்டியின் முடிவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.


இது தொடர்பான செய்திகள் :