மெக்ஸிகோ துப்பாக்கி சுடுதலில் சாதனை

Home

shadow


மெக்ஸிகோவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதலுக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர் ஷாஜர் ரிஸ்வி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பாக மெக்ஸிகோ நாட்டின் கவ்தலஜரா நகரில் துப்பாக்கி சுடுதலுக்கான உலகக் கோப்பை போட்டி மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஷாஜர் ரிஸ்வி, 242.3 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். ரிஸ்வி தான் பங்கேற்ற 14 சுற்றுப் போட்டிகளிலும் முதலிடம் வகித்து இறுதிச் சுற்றில் உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் இந்தியாவின் மற்றொரு வீரரான ஜிது ராய் 219 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 17 வயதான மெஹூலி கோஷ், 228.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். மொத்தம் 12 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 50 நாடுகளைச் சேர்ந்த 404 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் மொத்தம் 15 பதக்கப் பிரிவுகள் உள்ளன. இந்தியாவின் சார்பில் 33 பேர் கொண்ட குழு இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளது. இந்தியா இதுவரை ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் தற்போது முதலிடம் வகித்து வருகிறது.

 

இது தொடர்பான செய்திகள் :