மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி - 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Home

shadow

                        மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை   தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் சேர்த்தது.  பின்னர் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களம் இறங்கிய  இந்திய அணி 16 ரன்கள் சேர்ப்பதற்குள் தொடக்க பேட்ஸ்மேன்களை இழந்தது. மேற்கிந்திய  தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தாமஸ், கீமோ பால், பிராத்வைட்  இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.  இறுதியில்  17 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிக பட்சமாக தினேஷ் கார்த்திக் 31 ரன்கள் குவித்தார்.  இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி  நாளை மதியம் 2 மணிக்கு லக்னோவில் நடைபெறுகிறது.

இது தொடர்பான செய்திகள் :