ரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்

Home

shadow


இங்கிலாந்தில் வரும் மே 30ம் தேதி முதல் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. போட்டிகளைப் பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து 10 லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அத்தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டு உள்ளது. ஸ்டான்ட் பை என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகர் லாரின் பாடி அசத்தி இருக்கிறார்.உலக கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட்டாப், பாடகர் லாரின் ஆகியோர் இணைந்து இந்த பாடலை உருவாக்கியுள்ளனர்.பாடல் வெளியான சிலமணி நேரங்களில் வைரலாகி இணையதளங்களில் ஹிட்டாகி பட்டையை கிளப்பி வருகிறது.இது தொடர்பான செய்திகள் :