ராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி

Home

shadow

ராஜஸ்தான் ராயல்ஸ்சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி,எல் கிரிக்கெட் போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், ‘டாஸ்ஜெயித்த ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், ரஹானே இணை, நிதானமாக ஆடி அணியில் ரன் ரேட்டை உயர செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் இறங்கினர். இவர்களின் அதிரடியான ஆட்டத்தில் 10 ஓவர்களுக்குள்ளாகவே ஹைதராபாத் அணி 100 ரன்களை கடந்தது. ஆனால் இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :