ராமநாதபுரம்   கிடாச் சண்டை  

Home

shadow

கமுதி அருகே காளியம்மன் கோவில் மாசிக்களரி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கிடாச் சண்டை போட்டியில் வெற்றிபெற்ற கிடாய் உரிமையாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காடமங்குளம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் மாசிக்களரி திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவையொட்டி  நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், விஷேச பூஜைகள் நடத்தப்பட்டன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காடமங்களம் கிராம மக்கள் சார்பாக, மாநில அளவிலான கிடா சண்டை போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, திருச்சி, மதுரை, உசிலம்பட்டி, ராஜபாளையம், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 75 ஜோடி கிடாய்கள் பங்கேற்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற கிடா உரிமையாளர்களுக்கு, பீரோ, கட்டில், மிதிவண்டி, பித்தளை அண்டா, குத்து விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பான செய்திகள் :