விம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி

Home

shadow

           விம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ரோஜர்  பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

 
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.

இதில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தை சேர்ந்த மூன்றாம் நிலை வீரரான ரோஜர் பெடரரை எதிர்கொண்டார்.

5 மணி நேரங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7 – 6, 1–6, 7–6, 4–6, 13–12 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் 16ஆவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வது குறிப்பிடதக்கது.

இது தொடர்பான செய்திகள் :