விம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி

Home

shadow

                          விம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி

                          விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.

இதில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஸ்பெயினைச் சேர்ந்த பாடிஸ்ட்டா அகுட்டாவை எதிர்கொண்டார்.

2 மணி 49 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6–2, 4–6, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் பாடிஸ்ட்டா அகுட்டாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து, நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை எதிர் கொண்டார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், ரோஜர் பெடரர் 7-6, 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்த வெற்றியின் மூலம், பெடரர் 12-வது முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்.

விம்பிள்டன் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், பெடரர்- ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.


ரோஜர் பெடரர் 8 முறையும், ஜோகோவிச் நான்கு முறையும் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :