வெளிநாட்டு வீரரை பிடிக்கும் என்றால் இந்தியாவில் ஏன் வசிக்க வேண்டும் - விராட் கோலி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Home

shadow

 

வெளிநாட்டு வீரரை பிடிக்கும் என்றால் இந்தியாவில் ஏன் வசிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 5-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, தனது புதிய செயலியை விளம்பரப்படுத்துவதற்கான வீடியோ காட்சியை பதிவு செய்து வந்தார். அப்போது, அதில் ரசிகர்கள் பதியப்பட்டுள்ள கருத்தை வாசித்து அதற்கு பதிலளித்து வந்தார்.  அதில், ஒரு ரசிகர் இந்திய வீரர்களைவிட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விளையாடுவதையே ரசிப்பேன் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த கோலி, நீங்கள் இந்தியாவில் வாழ வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. வேறு எங்காவது போய் வாழுங்கள். நமது நாட்டில் வாழ்ந்து, அடுத்த நாட்டை ஏன் விரும்பவேண்டும்? என தெரிவித்திருந்தார். கோலியின் இந்த கருத்து இந்திய ரசிகர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலிக்கு கண்டனம் தெரிவித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

இது தொடர்பான செய்திகள் :