வேலூரில்   சதுரங்கபோட்டி  

Home

shadow

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் திரளான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் காட்பாடி கல்புதூரில் உள்ள சன்பீம் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர் ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் 25 வயது பிரிவில் விஷாரம் குளோபல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் சுபாஷ் சங்கர்,  15 வயது பிரிவில் கொணவட்டம் பள்ளி மாணவர் அரவிந்தநாத், 9 வயது பிரிவில் ஆதித்யா சிவேஷ் குளோபல் பள்ளி மாணவன், 13 வயது பிரிவில் லஷ்மி கார்டன் பள்ளியை சேர்ந்த பாரத்குமார் ,7 வயது பிரிவில் சன்பீம் பள்ளி மாணவி தானுப்பிரியா ஆகியோர் முதலிடம் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரத்திஷ் பரிசுகளையும் சான்றுகளையும் கோப்பைகளையும் வழங்கினார் இவ்விழாவில் சதுரங்க கழக தலைவர் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 

இது தொடர்பான செய்திகள் :