வேலூர் - விளையாட்டு போட்டி

Home

shadow

வேலூரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் காட்பாடி  வட்டம் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்றது. வேலூரில் மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா சார்பில் இரண்டு நாட்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 50-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 100 மீட்டர் ஆண்கள் ஓட்டப்பிரிவில் காட்பாடி கஸ்பாவை சேர்ந்த சூர்யா முதலிடம் வென்று கோப்பையை வென்றார்.  ஒடுக்கத்தூர் பள்ளிக்குப்பத்தை சேர்ந்த உதயகுமார் இரண்டாமிடம் வென்றார். 200 மீட்டர் ஓட்டத்தில் அஜீத்குமார் வென்றார். பெண்கள் பிரிவு 100 மீட்டர் ஓட்டத்தில் வேலூர் மோனிகா முதலிடமும்,காட்பாடி வடுகந்தாங்கலை சேர்ந்த திவ்யா இரண்டாமிடமும் வென்றனர்.  200 மீட்டர் பிரிவில் காயத்ரி முதலிடம் வென்றார். நீளம் தாண்டுதல் பெண்கள் பிரிவில் திவ்யாவும், ஆண்கள் பிரிவில் உதயகுமாரும் வென்றனர்.  வெற்றி பெற்றவர்களுக்கு நேருயுவகேந்திரா விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் விஜயாராவ் கோப்பைகளை வழங்கினார்.

இது தொடர்பான செய்திகள் :