ஹாப்மேன் கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

Home

shadow

ஹாப்மேன் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்த் வீரர் ரோஜர் பெடரரும், ஜப்பானின் யூகி சுகிதாவும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய பெடரர், யூகி சுகிதாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பெடரர், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டின் இறுதியை பெடரர் வெற்றியுடன் நிறைவு செய்ததற்கு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :