2018 காமன்வெல்த் போட்டிக்கு இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார்.

Home

shadow

2018ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான மல்யுத்த விளையாட்டு தகுதிச் சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் பிரிவில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற 74 கிலோ எடைப் பிரிவு தகுதிச் சுற்றுப்போட்டியில் ஜிதேந்தர் குமாரை வீழ்த்தி சுஷில் குமார் தகுதி பெற்றார்.

இந்நிலையில், மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற 62 கிலோ எடைப் பிரிவில் நட்சத்திர வீராங்கனை சாக்ஷி மாலிக் தகுதி பெற்றார்.

50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத், 57 கிலோ எடைப் பிரிவில் பூஜா தண்டா, 54 கிலோ எடைப் பிரிவில் பபிதா குமாரி, 68 கிலோ எடைப் பிரிவில் திவ்யா கரண், 76 கிலோ எடைப் பிரிவில் கிரண் ஆகியோரும் 2018 காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :