2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது

Home

shadow

2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி கோப்பையை டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகிகள் தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளனர். ஒரு கிலோ 20 கிராம் எடைக் கொண்ட இந்த கோப்பையானது, பிங்க் மற்றும் தங்க நிறத்தில் ஐந்து இதழ்களை கொண்டுள்ளது. ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள ஐந்து வளையங்களை சுட்டிக்காட்டும் வகையில் இந்த இதழ்களானது அமைக்கப்பட்டுள்ளது. டொகுஜின் யோஷிஓகா எனும் வடிவமைப்பாளர் இந்த கோப்பையை உருவாக்கி உள்ளார். 2011ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டு மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை அளிக்கும் வகையில், நம்பிக்கை ஒளி நம் வழியே எனும் கருப்பொருளை மையமாக கொண்டு இந்த கோப்பையானது உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 121 நாட்களுக்கு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :