25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.... 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 க்கு 2 என கைப்பற்றியது

Home

shadow

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 க்கு 2 என கைப்பற்றியது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று  நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தது. தவான் 12 ரன்கள், கோலி 20 ரன்கள், ரிஷப் பந்த் 16 ரன்கள், விஜய் சங்கர் 16 ரன்கள் என வரிசையாக ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மாவும் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.. இதனால், இந்திய அணி 132 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பிறகு, ஜாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஜோடி இணைந்து பொறுப்புடன் விளையாடி வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது. விக்கெட்டுகள் சரிந்ததால் இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் ஓவருக்கு 10-ஐ நெருங்கியது. எனினும், பவர் பிளே ஓவர்கள் தொடங்கிய பிறகு ஜாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் அதிரடி ஆட்டத்துக்கு மாறினர். ஆனால், இந்த அதிரடி நீண்ட நேரத்துக்கு தாக்குப்பிடிக்கவில்லை. புவனேஷ்வர் குமார் 46 ரன்களுக்கும், ஜாதவ் 44 ரன்களுக்கும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3 க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. உலகக்கோப்பைக்கு முன் நடைபெறும் கடைசி ஒருநாள் தொடரை இழந்துள்ளது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இது தொடர்பான செய்திகள் :