ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – ஜூன் 20ஆம் தேதி தள்ளிவைப்பு

/ அதிகம் படித்தவை

shadow

              ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – ஜூன் 20ஆம் தேதி தள்ளிவைப்பு

             ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி வேதந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற 20ஆம் தேதி நடைபெறும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வு முன்னையில் நடைபெற்றது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

 
நீதிமன்றத்தில் ஆஜரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என, தான் கடந்த 23 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தார்.

அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆலைக்கு ஆதரவாக வருபவர்கள் வணிக நோக்கத்திற்காக மட்டுமே, தங்களை வழக்கில் இணைக்க கோருவதாக தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ, பாத்திமா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று, வழக்கில், அவர்களையும் ஒரு தரப்பு வாதியாக சேர்க்க உத்தரவிட்டனர்.

ஆலைக்கு ஆதரவாக, வழக்கில் இணைக்க கோரியவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, வருகிற 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இது தொடர்பான செய்திகள் :