Vignesh Shivan

கண்களாலேயே காதல் செய்யும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா.. இணையத்தை தெறிக்கவிடும் ரொமான்டிக் போட்டோ!

விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை தன் காதலி நயன்தாராவுடன் கொண்டாடி கழித்தார். 
விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். லிவிங் டூ கேதரில் வாழ்ந்து வரும் அவர்கள் லாக்டவுன் காரணமாக இத்தனை நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். 

ஓணம் கொண்டாட்டம் :
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் வெளியே கிளம்பியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகைக்காக நயன்தாராவுடன் தனி விமானத்தில் கேரளா மாநிலம் கொச்சி சென்றார் விக்னேஷ் சிவன். இருவரும் ஒன்றாக ஓணம் கொண்டாடிய போட்டோக்கள் வைரலானது. 

கோவாவில் விடுமுறை : 
இதனை தொடர்ந்து தற்போது இருவரும் கோவாவில் விடுமுறையை கழித்து வருகின்றனர். நீச்சல் குளத்தின் அருகில் நயன்தாரா நின்று கொண்டிருக்கும் போட்டோவை முதலில் ஷேர் செய்த விக்னேஷ் சிவன் கோவாவில் இருப்பதை உறுதிப்படுத்தினார். ரசித்து ரசித்து.. அதன் பிறகு நயன்தாரா வெள்ளை நிற நைட்டியில் பூப்பறிக்கும் போட்டோக்கள் வெளியாயின. கோவாவில் அவர்கள் தங்கியிருந்த பிரைவேட் ஹவுஸின் தோட்டத்தில் இருந்த பூக்களை நயன்தாரா பறித்ததை ரசித்து ரசித்து போட்டோ எடுத்திருந்தார் விக்கி. கண்களாலேயே பேசி.. அந்த போட்டோக்களும் இணையத்தை கலக்கின. 

இந்நிலையில், கோவா ரெசார்ட்டில் தனது பிறந்த நாளை நயன்தாராவுடன் உற்சாகமாக கொண்டாடி வருகிறார் விக்னேஷ் சிவன். இருவரும் வீட்டின் வாசற்படியில் நின்றப்படி நீச்சல் குளத்தின் பக்கம் திரும்பியப்படி ஒருவரை அணைத்தப்படி கண்களாலேயே பேசிக் கொள்கின்றனர். 

பிறந்த நாள் வைப்ஸ்? இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த விக்னேஷ் சிவன், பிறந்தநாள் வைப்ஸ்????? கடவுளின் அருள் மற்றும் உங்கள் அற்புதமான இனிய வாழ்த்துக்கள்" என கேப்ஷன் கொடுத்துள்ளார். 

இதனை பார்த்த நடிகை சமந்தா, விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெறிக்கும் இணையம் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்களும் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இறுக்கி அணைத்து ரொமான்ஸ் செய்யும் இந்த போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate