கல்வி & வேலைவாய்ப்ப

பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு செய்த குட்டி விமானம் .

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாராணபுர அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு குட்டி விமானம் செய்யும் பயிற்சியை அளித்த சென்னையில் ட்ரோன் பயிற்சியாளராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி.

உலக தொழிநுட்பம் வளர்ந்து  வரும் இக்கால கட்டத்தில் சில  பள்ளி மாணவர்கள் புத்தகத்தில் படித்து ஒரு விஷயத்தை  அறிந்து கொள்வதை விட ,காட்சிகள் மூலம் கற்றுக்கொள்வதை விரும்புகிறார்கள் ,இப்படி காட்சிகள் மூலம் கற்றுக்கொள்வதால் அவர்களால் எளிதில் கற்றுக்கொள்ள முடிகிறது ,இதனால் பல கல்விநிலையங்கள் காட்சிகள் மூலம் பாடங்களை நடத்திவருகின்றனர் 

விருதுநகர் மாவட்டதில் உள்ள  நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிவகாசி தொழில்நகர் அரிமா சங்க சார்பாக ஆளில்லா குட்டி விமானம் உருவாக்குவது எப்படி என்று நேரடிப் பயிற்சி இன்று வழங்கப்பட்டது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ரெங்கநாயகி இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை வழங்கினார் .இப்பயிற்சியினை இஸ்ரோவில் இளநிலை ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் சுகம் வர்மா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பயிற்சி தொடக்க விழாவில் சிவகாசி தொழில்நகர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சுரேந்தர், அரிமா கூடலிங்கம் மற்றும் தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நாரணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

இப்பயிற்சியினை சென்னையில் உள்ள தனியார் ட்ரோன் பயிற்சியாளராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி, குட்டி விமானத்தை உருவாக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். குட்டி விமானங்களின்  உதிரி பாகங்களை மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு அவர்களே உருவாக்கும் வகையில் நேரடிப் பயிற்சி  வழங்கப்பட்டது.

 இஸ்ரோவில் இளநிலை ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் சுகம் வர்மா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பயிற்சி தொடக்க விழாவில் சிவகாசி தொழில்நகர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சுரேந்தர், அரிமா கூடலிங்கம் மற்றும் தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நாரணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.இதில் கலந்து கொண்ட மாணவர்கள் , தலைமையாசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee