கல்வி & வேலைவாய்ப்ப

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு !!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதனால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி அளித்துள்ளது.

 உலகில் பலநாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் மக்களின் நலன் கருதி தொற்று அதிகரிக்காமல் தடுக்க பல நாடுகளில் அரசாங்கம்  ஊரடங்கை பிறப்பித்தது.இதை தொடர்ந்து தமிழகத்திலும்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோவானவின் தாக்கம் குறைந்து வந்ததால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் இறுதி ஆண்டு மற்றும் எம்.இ., எம்.டெக். மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இதனால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன் படி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் ஏப்ரல் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும என தெரிவித்துள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee