லைப் ஸ்டைல்

கோடையின் வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி!!!

கோடைகாலத்தில் உடல் வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் தர்பூசணியின் பயன்கள்.

கோடைகாலங்களில் வெயில் வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுவதால் உடலில் உள்ள  நீர்ச்சத்துகள் வியர்வையின் மூலம் வெளியேறி, உடலை  சீக்கிரத்தில் வெப்பமடைய செய்கிறது. இதனால் உடல் சீக்கிரத்தில்  சோர்வடைகிறது. கோடைகாலங்களில் கிடைக்கின்ற போதெல்லாம்  தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வு  நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கிறது. தர்பூசணியில்  92 விழுக்காடு தண்ணீர் அடங்கியுள்ளது. நமது உடல்நிலை சமநிலையாக  இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் ,தாதுக்கள், இரும்புச்  சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்புச்  சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம் ,கால்சியம்  போன்ற சத்துக்கள்  அத்தியாவசியமாகும். இவை அனைத்தும் அவ்வப்போது நாம் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கின்றன. தர்பூசணி இதயம் சிறப்பாக  இயங்க உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கற்ப காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதால் கர்ப்பகாலத்தில் வரும் உயர்   இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். சருமத்தில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வறட்சியை நீக்கி சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது.மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate