உலகம்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு .... சேற்றில் சிக்கிய மக்கள் !!

கனமழை காரணமாக இந்தோனேசியாவில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் புதைந்ததில் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜகார்த்தா:
இந்தோனேஷியாவில் நேற்று  பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு , நாட்டின் கிழக்கு மாகாணத்தில் உள்ள புளோரஸ் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலச்சரிவில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.  “இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர், 40 பேர் இறந்துவிட்டனர், 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேற்றில் புதைந்துள்ளன, பலர் இன்னும் சேற்றில் சிக்கியுள்ளனர்" என்று தேசிய பேரிடர் மீட்பு ஆணைய செய்தித் தொடர்பாளர் ராதித்யா ஜாதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இந்தோனேஷிய ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் மேலும் அதிகாரிகளின் ஆலோசனைகளை மக்கள் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்திய  அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தரும் முயற்சிகள்  எடுத்துவருவதாக கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate