Just In

இந்தியாவை சீண்டும் அமெரிக்கா !!!

நட்புறவாக நடித்து இந்தியாவின் இறையாண்மையை குலைக்கும் முயற்சியில் தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளது அமெரிக்கா.

இந்திய கடல் பகுதியில் மத்திய அரசின் முன் அனுமதியைப் பெறாமல் அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் ஒன்று இந்திய எல்லைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் கடற்கரை பகுதிகளில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் பிரத்தியேக பொருளாதார மண்டலமாக வரையறுக்கப்பட்டுள்ளது.  பொதுவாக இந்தப் பகுதிகளில் மற்ற நாட்டு இராணுவ பயிற்சி மற்றும் ரோந்து பணி போன்றவற்றில் ஈடுபடும் பொழுது இந்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த விதிகளை அமெரிக்கா தொடர்ந்து ஏற்க மறுத்து வருவதுடன் சர்வதேச விதிகளுக்குட்பட்டு எந்த கடல் பகுதியில் பயணிக்கவும் பயிற்சிகளை மேற்கொள்ள தங்களுக்கு அதிகாரம் உண்டு என அந்த நாட்டு கடற்படை தொடர்ந்து கூறி வருகிறது.  இதனால் சர்வதேச கடல் எல்லைப் பகுதிகளில் சில நேரங்களில் அத்துமீறல்களால் தொடர் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது.  இந்த சூழலில் லட்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் அமெரிக்கக் கடற்படை பயிற்சி கப்பலான யுஎஸ்எஸ் ஜான்பால் ஜோன்ஸ் கப்பல்,  கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய எல்லைப் பகுதியில் இந்தியாவின்  அனுமதி இன்றி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சி மேற்கொண்ட அந்த பகுதி இந்தியாவின்  பிரத்தியேக பொருளாதார மண்டலப் பகுதிகளின் கீழ்  வருகிறது என இந்திய தரப்பின் முன்வைக்கப்படுவதோடு அமெரிக்கா முறைப்படி இந்திய அரசின் அனுமதியைப் பெறாமல் பயிற்சியில் ஈடுபட்டது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் செயலாகவே இது கருதப்படுகிறது.  மேலும் இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கச் செய்யாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதே சர்வதேச அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது. சீனாவுக்கு எதிராக செயல்பட இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்ளும் அமெரிக்காவின் இந்த செயல் இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பது மட்டுமன்றி இந்தியாவின் முதுகில் குத்துவதாக கருதப்படுகிறது. இச்சம்பவம் குறித்து   இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
 

 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate