Just In

வெளியானது கிளப் ஹவுஸ் ஆடியோ.... கொண்டாட்டத்தில் பாஜக.....

மேற்கு வங்கத்தில் 4 ஆம் கட்ட தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் பிரசாந்த் கிஷோரின் கிளப் ஹவுஸ் ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில்    8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தலை நடைபெற்று வருகிறது. இதற்காக பிரசாந்த் கிஷோருடன்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி ஒப்பந்தம் போட்டுள்ளார். அவர் வகுத்து கொடுத்த வியூகங்களின் அடிப்படையில்  திரிணாமூல் காங்கிரஸ்  தேர்தல் பணிகளை நடத்தி வருகிறது.மேற்குவங்க மாநிலத்தில் மூன்று கட்டத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் நான்காம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே  பிரசாந்த் கிஷோரின் கிளப் ஹவுஸ்  ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டரில்,   தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மேற்குவங்கத்தில் மோடிக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு உருவாகியுள்ளது என்பதில்   எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் நாடு முழுவதும் மோடிக்கு சாதகமான சூழல்   தென்படுகிறது. மேற்குவங்கத்தைப் பொறுத்தவரையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சூழலே  இருக்கிறது. எனவே பாஜக தான் வெற்றியடைய போகிறது.  மேற்குவங்கத்தில் 27 % இருக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் மோடிக்கு தான் கிடைக்க போகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் இடதுசாரிகள், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முஸ்லீம்களை திருப்திப்படுத்தும் வேலையை மட்டுமே  செய்திருக்கின்றன என்றும்  கூறியுள்ளார்.   

அமித் மால்வியாவிற்கு  பதிலளிக்கும் வகையில் பேசிய பிரசாந்த் கிஷோர், எனது   உரையாடலை மிகவும் முக்கியமானதாக பாஜக எடுத்துக் கொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அதேசமயம் எனது உரையாடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளனர். நான் பேசிய முழு உரையாடலையும் பாஜக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் ஆடியோவை தங்களுக்கு சாதகமாக்கியுள்ள பாஜக தலைவர்கள் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு வெற்றி என்பதில் உறுதியாக இருக்கின்றனர். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate