Trending News

கடலூர் சப்-இன்ஸ்பெக்ட்ர் கேப்டனாக நியமனம்!

கடலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் இந்துமதி ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கேப்டனாக நியமனம்.

கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சுமைதூக்கும் தொழிலாளியின் மகளான இந்துமதி, தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர் இதுவரை 34 போட்டிகளில் 12 கோல் அடித்துள்ளார்.இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகும் விதமாக சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் பெலாரஸ், உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்திய அணி நட்பு ரீதியிலான போட்டிகளில் பங்கேற்றது.இப்போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி நியமிக்கப்பட்டுள்ளார் .

இது குறித்து பேசிய இந்துமதியின் தந்தை "  இந்துமதிக்கு தனது சிறு வயதில் இருந்து கால்பந்து போட்டியில் ஆர்வமுள்ளது எனவே 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' வில்  காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது.அங்கும் அவர் கால்பந்து அணியில் விளையாடிவந்தார்.இந்நிலையில் தமிழக காவல்துறை மூலம் இந்திய அணி சார்பாக உஸ்பெகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .அவர் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது  மகிச்சியாக உள்ளது" என  கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate