Trending News

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப்பயணிகள் !!

கொரோனா அதிகரிப்பால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி கோடைகாலத்திற்கு முதல் கொடைக்கானலில் குவியும் சுற்றுலாபயணிகள்.

இந்தியாவில்  கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகிறது .

இந்நிலையில் கோடைகாலத்தில் கொடைக்கானல் செல்வதற்க்கு கட்டுப்பாடுகள் போடப்படும் என்ற அச்சத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது .இனி வார விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் வார நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அங்குள்ள சிறுவியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலாபயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நகராட்சி ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் வரும் சுற்றுலாபயணிகளிடம்  அபராதம் விதிக்கும் பணியிலும்  ஈடு பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate