தமிழ்நாடு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்!!!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் பகுதியில் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த நாற்பது அடி நீளமுள்ள லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தை சேர்ந்த புகழேந்தி (37)  இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில்  செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த போது  ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வடகால் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ராட்சத இரும்பு கூடாரத்தை ஏற்றி வந்த நாற்பது அடி நீளமுள்ள   லாரி மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே   உயிரிழந்தார்.  தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான லாரி  ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

                                          மேலும் கனரக வாகனங்கள் மற்றும்  ராட்சத லாரிகள் இரவு நேரங்களில் சாலையின் ஓரமாக நிறுத்தப்படுவதால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதாகவும், ஆகவே இதுபோன்று சாலையில் வாகனத்தை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடகால் கிராம மக்கள் அரசிடம்   கோரிக்கை வைத்துள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate