தமிழ்நாடு

சிலம்ப கலையில் கின்னஸ் சாதனை!!!

சென்னை ஆவடி அருகே சிலம்பம் கலையை ஊக்குவிக்கும் விதமாக மனிதன் சிலம்பம் சுற்றும் வடிவம் போல் மாணவ மாணவிகள் நின்று உலக சாதனை படைத்துள்ளனர்.

 தமிழ் பாரம்பரிய கலைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது சிலம்ப கலை.  இக்கலையை  முக்கியத்துவப்படுத்தும் விதமாக சிலம்ப கலையின் திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் ராமய்யா சிலம்ப கலை பயிற்சியை மாணவ மாணவிகளுக்கு அளித்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக  இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சியை அளித்து வருகிறார்.. இந்த நிலையில் சிலம்ப கலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக சென்னை ஆவடியை  அடுத்த பருத்திப்பட்டு ஏரி பூங்காவில் விழிப்புணர்வு  நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்ப கலை சின்ன வடிவத்தில் நின்றது பார்வையாளர்களை வெகுவாக  கவர்ந்துள்ளது.  இந்த நிகழ்வானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.. சிலம்ப கலை சின்னத்தில் நின்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றுதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சிலம்ப கலை திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் ராமய்யா, 1980ம் ஆண்டு எம்ஜிஆர் இருந்த போது பி.கே. முத்தாரமன் முயற்சியால் சிலம்ப கலைக்கு அங்கிகாரம் கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு தொடர்ந்து இந்த கலையை அனைவருக்கும் வழங்கி வருவதாகவும், தற்போது இலவசமாக பயிற்சியை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சி அளித்து வரும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க்கும் அளவிற்கு பயிற்சியளித்துள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate