தமிழ்நாடு

ஊரடங்கால் திருப்பூரில் தொழில்கள் பாதிப்பு!!!

ஊரடங்கால் திருப்பூரில் தொழில்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தொழில்களுக்கேற்ப தளர்வுகளை ஏற்படுத்துமாறு தொழில்துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின்   இரண்டாம் அலை அதிகமாக  பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள்  பிறப்பித்த ஊரடங்கு தளர்வுகளினால் தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும் தொழில்களுக்கேற்ப தளர்வுகளுக்கான உத்தரவை பிறப்பிக்கவேண்டுமென்றும்  திருப்பூர் மாவட்டத்தின் தொழில்துறையினர் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வருட ஊரடங்கால்  சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளும் பனியன் தொழில் நிறுவனங்களும்  சரிவடைந்தன.   இந்த ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் திருப்பூர் தொழில் துறையினர் எந்த தொழிலும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் "திருப்பூர் நிறுவனங்களில் அரசு உத்தரவின்படி தாங்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு பனியன் தொழில் நிறுவனத்தில் வேலை  செய்து வருகிறோம்.  ஊரடங்கு உத்தரவால்   குறிப்பிட்ட 50 பேருக்கு  மட்டும்  வேலை கொடுப்பது சாத்தியமற்றது.   வேலையாட்கள் குறைவாக இருப்பதால் ஆர்டர்கள் வரும்போது அதனை சரியான நேரத்தில் கொடுக்காவிட்டால் ஆர்டரை கேன்சல் செய்யும்  நிலை ஏற்படுகிறது.    கடந்த ஆண்டு  ஊரடங்கால்    ஏற்பட்ட நஷ்டங்களை இன்னும் சரி செய்ய முடியவில்லை. இதனால் தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  வேலையாட்கள் அவரவர்  சொந்த ஊருக்கு சென்றால் வேலைக்கு  ஆட்கள் கிடைப்பதே சிரமம் .  பல நிறுவனங்கள் தற்போது இயக்கத்தில் இல்லை. பல தொழிலதிபர்கள் தொழிலை விட்டுவிட்டனர்.  சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இந்த நிலை மீண்டும் நீடித்தால் திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் இயங்குவது  மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும். எனவே  இதை  கருத்தில் கொண்டு அரசு திருப்பூர் தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அரசு ஊரடங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று  திருப்பூர் தொழில்துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate