தமிழ்நாடு

கணவனை மீட்டுத்தரகோரி மனு!!!

சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த கணவரின் உடல்நிலை மோசமாகிய நிலையில் கணவரை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரமக்குடியை சேர்ந்த விஜயரேகா என்பவர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் குளவி பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மனைவி விஜயரேகா சவுதி அரேபியாவில் வேலை செய்து  வந்த கணவரை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி தனது இரு மகன்களுடன்  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

தனது கணவர்  வெள்ளைச்சாமி கடந்த 7 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது தனது கணவருக்கு திடீரென உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ,அங்கு கணவர் வேலை  செய்த கம்பெனியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது ஊருக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறியவர்கள் இதுவரை அனுப்பவில்லை, ஆகையால் தனது கணவரை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர்  உதவ வேண்டுமென தனது இரு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate