கல்வி & வேலைவாய்ப்ப

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதில் சிக்கல் !!

சர்வர் வேகம் குறைவாக உள்ளதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றன.இந்நிலையில் இளநிலை படிப்புகளுக்கான இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் எழுதிய பொறியியல் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று இரவு வெளியிட்டது. மேலும் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்வர் கோளாரு காரணமாக இணையதள பக்கத்தை பார்க்க முடியவில்லை இதனால் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து பேசிய  கல்லூரி முதல்வர்கள் ":ஒரே நேரத்தில் ஏராளமானோர் குறிப்பிட்ட இணையதள பக்கத்தை பார்க்க முயற்சிக்கும் காரணத்தினால் சர்வரின் வேகம் குறைந்துள்ளதாகவும் இன்று மாலைக்குள் சர்வரின் வேகம் அதிகரித்து விடும். எனவே மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளனர்.  


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee