ஆன்மிகம்

துவங்கியது பழனி சித்திரைத் திருவிழா!!!

பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 24ம் தேதி திருக்கல்யாணமும், வரும் 26ம் தேதி திருத்தேரோட்டத்துக்கு பதிலாக சுவாமி சப்பரத்தில் கோயில் வளாகத்தில் சுற்றி வருதலும் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெற்ற நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வரும் காரணமாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுவாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இதன்படி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலின் சித்திரைத்திருவிழாவிற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  அதன்படி இன்று காலை கொடியேற்றம் திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் ஐந்து பேருடன் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.  பூஜை பொருட்கள், கருடாழ்வார், சங்கு சக்கரம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  தொடர்ந்து கோயில் கோயிலை வலம்வர செய்யப்பட்டு செப்புக்கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.  தொடர்ந்து கொடிக்கம்பத்துக்கு எழுந்தருளிய அருள்மிகு இலக்குமி நாராயணருக்கு சிறப்பு பூஜைகள், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  கொடியேற்றத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  கொடியேற்றம் முடிந்த பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் ஏப்.24ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.  வரும் ஏப்.26ம் தேதி சித்திரைத் தேரோட்டம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக சுவாமி கோயில் வளாகத்தில் சப்பரத்தில் சுற்றி வர திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.  மேலும், அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் வரும் ஏப்.26ம் தேதி நடைபெற இருந்த பால்குட ஊர்வலம் மற்றும் சித்ரா பவுர்ணமி வெள்ளித்தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee