ஆன்மிகம்

மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா!!!

மயிலாடுதுறை அருகே மல்லியம் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

 மயிலாடுதுறை அருகே மல்லியம் கிராமத்தில் பழைமை வாய்ந்த மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இப்பகுதியினருக்கு மட்டுமன்றி வெளியூர்வாசிகள் பலரின் குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. இந்த கோயில் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் கிராம மக்களின் முயற்சியால் இன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமையன்று அனுக்ஜை, விக்னேஸ்வரபூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு, அன்றிரவு முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜை செய்யப்பட்டது. உற்சவ தினமான இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜையில், மகா பூர்ணாஹ_தி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து விமான கும்பத்தை அடைந்து, அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் ஒலிக்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல், அதேபகுதியில் அமைந்துள்ள ஐயனார், பிடாரி அம்மன் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee