லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் நீளமான கூந்தலை பெற வேண்டுமா?

இயற்கையான முறையில் கூந்தலை கருமையாகவும் நீளமாகவும் வளர்க்க இதோ புதிய டிப்ஸ்.

பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடி ஒரு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்க தான் செய்கிறது. நாம் இப்பொழுது நவீன யுகத்தில் இருக்கிறோம். நமக்கு நம்மேல் அக்கறை எடுத்துக்கொள்ளவே நேரம் இருப்பதில்லை. வேலை பளு, மன உளைச்சல், உடல் வெப்பம் போன்ற பல காரணங்களால் நம் தலைமுடி பொலிவிழந்து, அடர்த்தி குறைந்து போகிறது. பெரும்பாலும் தலையில் எண்ணெய் வைக்காததால் தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு, உடல் வெப்பம் அதிகரித்து தலைமுடி உதிர ஆரம்பிக்கிறது. இதனாலே பலர் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் முடியையும் இழந்து விடும் நிலைக்கு செல்கின்றனர். இப்படி நாம் கஷ்டப்பட்டதெல்லாம் போதும். இயற்கையான முறையில் பக்கவிளைவுகள் இல்லாமல் முடியை கருமையாகவும், பொலிவாகவும், நீளமாகவும் எப்படி வளர வைப்பது என்பதை இந்த பதிவில் காணலாம். 

தேவையான பொருட்கள்: 

பாசிப்பயறு - 5 டேபிள் ஸ்பூன் 
கற்றாழை ஜெல் - 1/4 கப் 
செம்பருத்தி பூ - 5 
அரிசி கழுவிய நீர் - 1/2 கிளாஸ் 
கறிவேப்பிலை - 1 கைப்பிடி 

செய்முறை: 
பாசி பயரை குறைந்தது 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த பாசிப்பயறுடன் கற்றாழை ஜெல் , செம்பருத்தி பூ , கறிவேப்பிலை சேர்த்து அரைத்து அதனுடன் சரியான பதம் வரும்வரை அரிசி கழுவிய நீரை சேருங்கள். இப்பொழுது இந்த பேஸ்டை தலைமுடியின் வேர்கால்களில் தடவுங்கள். பின் 30 நிமிடம் கழித்து மிதமான சூடுள்ள நீடில் தலை  குளியுங்கள். இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

பயன்கள்: 

பாசிப்பயறு உடலின் வெப்பத்தை தணித்து  உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். கறிவேப்பிலை தலை முடியின் வேர்கால்களுக்கு ஊட்டமளித்து முடிநன்கு கருமையாக வளர உதவும்.  கற்றாழை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு, தலையில் உள்ள பொடுகை நீக்க உதவுகிறது. அதுமட்டுமன்றி முடிக்கு ஈரப்பதம் அளித்து முடி பொலிவாக இருக்க உதவுகிறது. இது இயற்கை கண்டிஷனாராக பயன்படுகிறது. செம்பருத்தி பூ இல்லையென்றால் அதற்கு பதில் செம்பருத்தி இலையை பயன்படுத்திக்கொள்ளலாம். இது முடிவளர்ச்சிக்கு பெருதும் உதவுகிறது. முடியின் வெடிப்புகளை நீக்கி நீளமாக வளர உதவுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee