லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் முகம் பளபளக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பளபளக்க வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்கள்.

வெயில் காலம் வந்துவிட்டது. அலைந்து திரிந்து, வேர்வையில் நனைந்து முகமெல்லாம் கருத்துப்போய் இருக்கும். முகமெல்லாம் வேர்வையுடன் சேர்ந்து தூசுகளும், புழுதியும் சேர்ந்து முகம் வாடி வதங்கி போய் இருக்கும். முகம் கழுவுவதால் மட்டும் முகத்தில் படிந்திருக்கும் தூசுகள் நீங்கிவிடாது. முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமம் புத்துயிர் பெற அரிசி மாவு பேஷியல் எப்படி செய்வது என்பதை பற்றி பார்போம். 

தேவையான பொருட்கள்: 

அரிசி மாவு - 3 ஸ்பூன் 
கஸ்தூரி மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 

செய்முறை: 

ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து அந்த பேஸ்டை முகத்தில் பேஸ்பேக் போல் போட்டு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இருமுறை செய்வதன் மூலம் சருமத்தில் இறந்த செல்கள் நீங்கி சருமம் புத்துயிர் பெற்று பளபளக்கும். 
 
பயன்கள்: 

அரிசி மாவு ஒரு ஸ்க்ரப்பர் போல் செயல்பட்டு முகத்தில் இறந்த செல்களையும் தூசுகளையும் நீக்க உதவும். எலுமிச்சை முகத்திற்கு பொலிவை அளிக்கும். மஞ்சள் ஒரு அழகு கூட்டும் பொருள் என்பதால், சருமத்தை பளபளப்பாக வைத்து சருமத்திற்கு பொலிவை தரும். கிழங்கு மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்க்கலாம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee