லைப் ஸ்டைல்

இனி முருங்கை பூவை ஒதுக்கமாட்டீர்கள்......

முருங்கை பூவில் உள்ள நன்மைகளை பற்றி இப்பதிவில் காண்போம்.

பொதுவாக முருங்கை மரம் வீட்டிலேயே வளர்க்கப்படுகிறது. ஊர்களில் பார்த்தோமானால் ஒவொரு வீட்டிற்கும் ஒரு மரம் நிச்சயம் இருக்கும். இந்த முருங்கை கீரையில் இரும்புச்சத்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் அனைவரும் முருங்கை காயையும் கீரையையும் மட்டும் எடுத்துக்கொண்டு பூவை விட்டுவிடுவோம். உண்மையில் சொல்ல போனால் முருங்கையின் பட்டை, இல்லை, காய், பூ, வேர் என அனைத்தும் மருத்துவகுணம் மிக்கவை. இந்த பதிவில் முருங்கையின் பலன்களை பற்றி பார்ப்போம். 


* இருமல், சளி உள்ளவர்கள் முருங்கை இலையுடன் உப்பு சேர்த்து கசக்கி சாறெடுத்து, அதனுடன் சுண்ணாம்பு சேர்த்து அந்த கலவையை சூடாக்கி கழுத்து பகுதியில் தடவினால், இருமல், சளி நீங்கும்.  

* முருங்கை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடியாக்கி  அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் குணமாகும். 

*முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல்  அதிகரிப்பதுடன் ஞாபகமறதி குணமாகும். 

* முருங்கைப் பூவை நீரில் கொதிக்க வைத்து  கசாயம் செய்து அருந்தி வந்தால்  மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி போன்ற  உபாதைகள் குறையும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee