ஆன்மிகம்

இன்று முதல் திருப்பதியில் புதிய கட்டுப்பாடுகள் !

கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது.

திருப்பதி:-

கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது.
 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை 15,000ஆக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் திருப்பதியில் காலை 7 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என திருப்பதி மாநகராட்சி ஆணையர் கிரிஷ் அறிவித்துள்ளார்.

தொற்று பரவல் காரணமாக திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று 12,515 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,022 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.72 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee