Just In

பிரபல நடிகர் செல்லதுரை காலமானார்!!!

பிரபல நடிகர் செல்லதுரை உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

மூத்த நடிகரான செல்லதுரை (84) விஜய்யின் தெறி, கத்தி, தனுஷின் மாரி, ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை, ராஜா ராணி, அறம்  உள்ளிட்ட  பல்வேறு படங்களில் நடித்தவர்.  இவர் நேற்று மாலை உடல்நல குறைவு காரணமாக  சென்னை வெங்கட்ராமன் சாலையில் உள்ள பெரியார் நகரில்  தன் இல்லத்திலேயே  காலமானார். 

குணச்சித்திர நடிகரான இவர்  தெறி படத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தையாக நடித்திருப்பார். இவர் நடித்த  'அப்படியா விஷயம்'  என்ற மீம் டெம்ப்ளேட்  நெட்டிசன்களுக்கு பிடித்தமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.வயதாலும் துடிப்பாக திரைத்துறையில் வலம்வந்தவர். இவரது இறுதி அஞ்சலி இன்று மாலை 2 மணி அளவில் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது. இவரது மறைவிற்கு  ரசிகர்கள் இணையத்தில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee