Just In

கருத்துக்கணிப்புகள் கருத்துத் திணிப்பாகத்தான் உள்ளது - ஜெயக்குமார்

கருத்துக்கணிப்புகளை முறியடித்து மீண்டும் அதிமுக - வின் ஆட்சி தான் தொடருமென விளக்கமளித்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

ஒவ்வொரு தொகுதியிலும் இலட்சக்கணக்கான வாக்காளர்கள் இருக்கும் பட்சத்தில் 200 - 300 பேர் கணக்கெடுத்து அது கருத்துக்கணிப்பு என்றால் அதை ஏற்க முடியாது என ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். கருத்துக்கணிப்புகள் கருத்துத் திணிப்பாகத்தான் உள்ளது என்றும்,  பிரச்சாரக் களத்தில் அதிமுகவுக்கு அமோக வரவேற்பு இருந்தது. 2016 தேர்தல் கருத்துக்கணிப்புகளை முறியடித்து  அதிமுக வெற்றி கண்டது. அதை மக்கள் யாரும் மறந்துவிட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.  

தபால் வாக்குகளை பொருத்தமட்டில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ,  அதே நடைமுறைதான் எந்த முறையையும் பின்பற்ற வேண்டும் என்ற தங்களின் கருத்தை தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே  தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அவர்,  திமுக - வினர் கற்பனை கனவோடு வாழ்ந்து வருகிறார்கள் என ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக தான் மீண்டும் ஆட்சி பீடத்தை அலங்கரிக்கும் எனவும்   அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.  



Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee