Just In

செல்போனுக்கு பதில் கால்பந்தாட்டம்...கலக்கும் பள்ளத்தூர் கிராமம்

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் பள்ளி மாணவ, மாணவிகளை செல்போன் மோகத்திலிருந்து மீட்கும் விதமாக, கால்பந்தாட்ட பயிற்சி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் கிராமமாக இருந்து வருகிறது. இங்கு கடந்த 1956 முதல் தென்னரசு கால்பந்து கழகம் இயங்கி வரும் நிலையில்,
இங்கிருந்து சுமார் ஆயிரக்கணக்கான கால்பந்தாட்ட வீரர்கள் பயிற்சி பெற்று மாநில, மற்றும் தேசிய அளவில் சிறந்து விளங்கி வருகின்றனர். பலர் அரசு வேலைவாய்ப்பை பெற்று இந்த கால்பந்தாட்ட கழகத்திற்கு பெருமையும் சேர்த்துள்ளனர்.

மூன்றாவது தலைமுறையாக செயல்பட்டுவரும் தென்னரசு கால்பந்தாட்ட கழகத்தில்,கடந்த ஒரு மாத காலமாக 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 6 வயது முதல் 16 வயது வரையிலான சின்ன சிறு வயதினருக்கான இப்பயிற்சியில், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கொத்தமங்கலம், கொத்தாரி உட்பட சுற்றுப்புற கிராம சிறுவர் சிறுமியர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் இப்பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சி முடித்தவுடன் வீரர்களுக்கு முட்டை, பால் போன்ற ஊட்டச்சத்தான உணவுகளும் வழங்கப்பட்டது. சிறுவர்களை செல்போன் மோகத்திலிருந்து கவனத்தை திசை திருப்பி விளையாட்டில் கவனம் செலுத்தி சாதிக்க இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக  தென்னரசு கால்பந்து கழகத்தின்  தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee