Just In

உழைக்கும் வர்க்கத்தின் உரிமை நாள் மே தினம்!!!

மே 1 உழைப்பாளர் தினமாக உலகமனைத்திலும் கொண்டாடப்படுகிறது. இன்று நாம் 8 மணிநேரம் மட்டும் வேலை செய்கிறோம் என்றால், அதில் பலரது ரத்தமும், கண்ணீரும் கலந்திருக்கிறது. இந்த 8 மணிநேர வேலை கொள்கை கேட்டதும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள  தொழிலாளிகள்  நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். 


இதற்கெதிராக பிரான்ஸ், ஆஸ்திரேலியா,ரஷ்யா, அமெரிக்கா,சிக்காகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே கூட்டங்களும், கண்டனங்களும், எழுச்சிகளும், கிளர்ச்சிகளும் முளைக்க துவங்கியது. இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம்  10 மணி நேர வேலை கோரிக்கை உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து  நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.


தச்சுத் தொழிலாளர்கள்,நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள்,இரயில்வே தொழிலாளர்கள்,கட்டிடத் தொழிலாளர்கள் போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிறுவனங்களை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொடங்கினர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால்,பெரிய  நிறுவனங்கள் மூடப்பட்டன, தொழில்  வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பின்  ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் வித்தாக  அமைந்தது. இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட சிலர் தூக்கிலிடப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் நீத்தனர். 

1889 ஜூலை 14 ஆம் தேதி பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ என்ற கூட்டத்தில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள்  பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று சர்வதேச  அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாட  வழிவகுத்தது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee