Just In

மயக்கம் வருபவர்கள் இங்க போகாதீங்க!!!

உலகின் மிக நீளமான பாதசாரிகள் நடக்கும் பாலம் போர்ச்சுகலில் திறக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக நீளமான பாதசாரிகள் நடக்கும் பாலம் வடக்கு போர்ச்சுகலின் அரூக்கா அருகே திறக்கப்பட்டது. இது 516 மீட்டர் நீளமுள்ளது. உலோக கம்பிகளால் அமைக்கப்பட்ட இந்த பாதை நடுவில் சிறு துவாரங்கள் இருப்பதால் கம்பிகளுக்கு பின் உள்ள காட்சிகளை  பார்க்கும் வகையில் அமைத்துள்ளது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற அரூகா உயிரியல் பூங்காவின் உள்ளே பசுமையான பச்சை  மற்றும் மஞ்சள் பூக்களால் மூடப்பட்டு , பாறைகள் நிறைந்த மலைகளுக்கு இடையில் மறைந்திருக்கிறது. 


 இந்த பாலம் வேகமாக ஓடும் பைவா நதிக்கு 175 மீட்டர் உயரத்தில் தொங்குகிறது. சுற்றிலும் அமைதியான சூழல் நிலவும் இந்த பாலத்தை எளிதில் மயக்கம் வருபவர்களால் கடப்பது கடினம்.  ஒவ்வொரு பக்கத்திலும் எஃகு கேபிள்கள் மற்றும் இரண்டு பிரம்மாண்டமான கோபுரங்களால் கட்டப்பட்ட இது ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும்போதும் சிறிது அசைகிறது. இந்த பாலம் வியாழக்கிழமை உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே திறக்கப்பட்டது, ஆனால் திங்கள் (மே 3) முதல் அனைவரும்  சுற்றி பார்க்க அனுமதிக்கப்படும். இந்த பாலம் சுமார் 2.8 மில்லியன் டாலர் செலவழித்து இரண்டு வருடங்களாக  கட்டப்பட்டது.  கொரோனா பரவலால் அச்சத்தில் உறைந்த மக்களுக்கு இந்த பகுதி நிச்சயம் ஒரு அமைதியை தரும்  என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee