லைப் ஸ்டைல்

கோடைகாலத்தில் 10 நாள்வரை வைத்து உண்ணக்கூடிய சிற்றுண்டி

கோடைகாலத்தில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு பல குளிர்பானங்கள் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிடாமல் பாசி பயரினால் செய்யப்படும் இந்த பயத்தம் பலகாரத்தை சாப்பிட்டு பாருங்கள்.

பாசி பயரின் மருத்துவப் பயன்கள்  :

1.பாசி பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகியவை உடல்நலத்தை பாதுகாக்கின்றன. இப்பயறானது கண்கள், கேசம், நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.

2.இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்சத்தான பெக்டின் குடலில் உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது.

3.பாசி பயரில் உள்ள பொட்டாசியம் ,நார்சத்து,மெக்னிசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.

4. மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டுவந்த வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடையும்.

5.இதனை சாப்பிடுவதால் நமது சருமமும் பளபளப்பாக இருக்கும்
  
  இப்பொழுது பாசி பயறு பலகாரம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 
பாசி பயறு -500கிராம் 
துருவிய தேங்காய் -200 கிராம் 
சீனி – 1/2 கிலோ
மிளகு -1/2 தேக்கரண்டீ 
தண்ணீர் - 250மில்லி லிட்டர் 
சமையல் எண்ணெய் -தேவையான அளவு 
பச்சரிசி – 1/2 கிலோ
உப்பு – 1/2 டீ ஸ்பூன்
ஏலக்காய் – 10
மைதா – 1/4 கிலோ

செய்முறை:
1.முதலில் வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, பச்சைப்பயிறு ,துருவிய தேங்காய்,மிளகு ஆகியவற்றை தனி தனியாக வறுத்து வைத்துக்கொள்ளவும் .

2.பிறகு வறுத்த பச்சரிசி ,பச்சைப்பயறு மற்றும் மிளகுடன் ஏலக்காய் சேர்த்து மாவாக அரைத்து எடுக்கவும் அல்லது ரைஸ் மில்லில் திரித்து எடுக்கவும் .

3.தற்போது  அரைத்தெடுத்த மாவுடன் வறுத்த தேங்காய் மற்றும் சீனியை 5 வினாடிகள் மிக்சியில் அரைத்து சேர்க்கவும் பிறகு சிறிது சிறிதாக வெது வெதுப்பான தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசையவும் .பிறகு  அதனை சிறிய உருண்டையாக  பிடித்து வைத்து கொள்ளவும்.

4.இப்பொழுது தனியே ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், உப்பு, தண்ணீர்,மஞ்சள் ஆகிய மூன்றினையும்  சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

5.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும் , உருட்டி வைத்துள்ள உருண்டைகளை  எடுத்து  கரைத்து வைத்துள்ள மைதா மாவில் முக்கி வாணலியில் உள்ள எண்ணெயில் ஒன்றொன்றாக போட்டு மைதா மாவு கருகி விடாமல் பொரித்தெடுக்கவும்.

6.இந்த ஊட்டச்சத்து மிகுந்த இந்த பலகாரத்தை பொரித்தவுடன் ஆறவைத்து பிறகு காற்று புகாத பாத்திரத்தில் வைத்தால் பத்து நாட்கள் வைத்து  சாப்பிடலாம்.

குறிப்பு :
'அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு '  என்ற பழமொழிக்கேற்ப சுவையாக  உள்ளது என மிகவும் அதிகமாக சாப்பிட கூடாது ஏன் என்றல் பாசிப்பயறு மிகவும் குளிர்மையானது .எனவே இது சிலருக்கு ஒற்றுக்கொள்ளாது அதிகம் உட்கொண்டால் உடம்பு குளிச்சியாகி  தலைவலி,சளி மற்றும் காய்ச்சல்  ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee