லைப் ஸ்டைல்

சிறிதளவு கற்பூரவள்ளியின் மகிமை !!

உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வு தரும் கற்பூரவள்ளி .

நமது நாட்டில் பெரும்பாலும் அனைவரது வீட்டிலும்  வளர்க்க  கூடிய மருத்துவ குணம் கொண்ட கற்பூரவள்ளி சளிக்கு நன்மை அளிக்கும் என்று தான் நினைத்திருந்தோம் ஆனால் அதற்கு மட்டும் அல்லாமல் நம் உடலில் உள்ள பல  நோய்களுக்கு பலன் அளித்துவருகிறது.அது என்னவென்று தற்போது இந்த குறிப்பில் பார்ப்போம்.

கற்பூரவள்ளி பயன்கள்:

1.தோல்:

 நமது உடலின் மேல் உள்ள தோலில் ஏற்படும் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளின் சாறை எடுத்து பாதிக்கப்பட்ட  தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமடையும்.

2.புற்று நோய்:
 புற்று  நோய்களை தவிர்க்கும் இயற்கை பொருட்களில் கற்பூரவள்ளியும் ஒன்று.இந்த இலைகளில் நிறைந்திருக்கும் ஒமேகா – 6 வேதிப்பொருட்கள்  புற்று நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக புற்று நோய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

3.மன அழுத்தம்: 
 கற்பூரவள்ளி செடிகளின் இலைகளின் வாசத்தை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு, அந்த இலைகளில் இருக்கும் ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம், படபடப்பு தன்மை போன்றவற்றை போக்குகிறது.

4.சிறுநீரகங்கள்:
 கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்கங்களை நலமாக வைத்துக்கொள்கிறது.

5.ஆஸ்துமா:

 ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் சுவாசிக்க அவதிப்படுவார்கள் . எனவே, ஆஸ்துமா நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினமும் கற்பூரவள்ளி சாற்றை பனங்கற்கண்டு மற்றும் தேனுடன் கலந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக்கோளாறு நீங்கும்.

6.புகைபிடித்தல்:
  புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. கற்பூரவள்ளி மற்றும் சுண்டைக்காயை அரைத்து அதன்  சாறினை அருந்தி வந்தால் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் நீங்கும். நுரையீரல் சம்பந்தமான புற்று நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee