தமிழ்நாடு

ஆக்சிஜன் உற்பத்திசெய்ய ஸ்டெர்லைட் ஆலை தயார்!!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திசெய்ய தயாராக இருப்பதாக வேதாந்தா நிறுவனம் தகவல்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை தவிர்க்கும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதி வழங்கியதை  அடுத்து தற்போது ஆக்சிஜன் உற்பத்திசெய்ய ஸ்டெர்லைட் ஆலை தயாராக உள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மருத்துவமனைகள் நோயாளிகளால் குவிந்து வருகின்றன.எனவே மருத்துவமனைகளில்  ஆக்சிஜன் உட்பட பல மருத்துவ சாதனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் பல நாட்டவர்கள் முன்வந்து இந்தியாவுக்கு ஆக்சிஜன் அளித்தாலும்,தொற்று அதிகரிப்பதால் நாளுக்கு நாள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் கொரோனா நோயாளிகள் சுவாசிக்க சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் தூத்துக்குடியில் பொது  மக்களின் போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்ட  ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜனை உற்பத்திசெய்வதற்காக தற்காலிகமாக   4 மாத காலத்துக்கு திறந்து ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது..இதனை எதிர்த்த தூத்துக்குடி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக வண்ண கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர் . 

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜனை உற்பத்திசெய்ய தயார் நிலையில் இருப்பதாகவும் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டவுடன், உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee