தமிழ்நாடு

பிரபல நடிகரின் தங்கை வீட்டிற்குள் புகுந்த யானை கூட்டம்!!

தமிழ்த்திரை உலகின் பிரபல நடிகர் சத்யராஜின் தங்கை வீட்டில் காட்டுயானைகள் சென்று தண்ணீர் குடித்த புகைப்படங்கள் வைரல்.

நீலகிரி மாவட்டத்தின் குன்னுரில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வரும் பிரபல தமிழ் நடிகரான சத்யராஜின் தங்கை கல்பனா வீட்டில் காட்டு யானைகள் புகுந்து தண்ணீர் குடித்து அங்கும் இங்கும் நடமாடிய  புகைப்படங்கள் வைரல்.

நீலகிரி மாவட்டம் பாலமலை  காட்டுப்பகுதி என்பதால் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் காட்டு விலங்குகள் நுழைவது வழக்கமான ஒன்று தான்.இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடிகர் சத்யராஜின் தங்கை வீட்டுக்குள் நுழைந்தன.இதைப்பார்த்ததும் வீட்டில் வேலை செய்தவர்கள் அலறியடித்து ஓடி ஒளிந்துள்ளனர், ஆனால் யானைகளோ மிக சந்தோஷமாக சுற்றித் திரிந்து அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் நீர் அருந்தி விட்டு அங்கும் இங்கும் நடமாட்டிவிட்டு சென்றுள்ளன.இந்த சம்பவத்தில்  யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee