தமிழ்நாடு

ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!!!

திமுக ஆட்சி அமைப்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிமை கோரியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது. இதில், திமுக மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 133 எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக, மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும் அமைச்சரவை பட்டியலையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம், மு.க.ஸ்டாலின் வழங்கியதாகவும், ஆட்சி அமைக்க இன்று மாலைக்குள் ஆளுநர் அழைப்பு விடுப்பார் எனவும் கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee